பேரறிவாளன் வழக்கறிஞராக பதிவு

A. G. Perarivalan
By Fathima Apr 28, 2026 07:43 AM GMT
Report

முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் விடுவிக்கப்பட்ட பேரறிவாளன் நேற்று தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலில் வழக்கறிஞர்களாக பதிவு செய்து கொண்டனர்.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலில் நேற்று சட்டப்படிப்பை முடித்தவர்கள் வழக்கறிஞர்களாக பதிவு செய்யும் நிகழ்ச்சி நடந்தது.

இந்நிகழ்ச்சியில் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி கலந்து கொண்டு, சிறப்புரையாற்ற, பார் கவுன்சில் தலைவர் அமல்ராஜ் வரவேற்புரையாற்றினார்.

பேரறிவாளன் வழக்கறிஞராக பதிவு | Perarivalan Registered As Lawyer

இதில் 1250 பேர் கலந்து கொண்டனர், அவர்களுள் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் விடுவிக்கப்பட்ட பேரறிவாளனும் ஒருவர்.

ராஜிவ் காந்தி கொலை வழக்கில், பேரறிவாளன் உச்ச நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டதால், காவல்துறையிடமிருந்து வழக்கறிஞராக பதிவு செய்ய ஆட்சேபமில்லா சான்று வழங்கப்பட்டு, வழக்கறிஞராக பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.