பேரறிவாளன் விடுதலை குறித்து ஜனாதிபதியே முடிவெடுக்க வேண்டும்: மத்திய அரசு தகவல்

india arrest kill
By Jon Jan 20, 2021 04:19 PM GMT
Report

பேரறிவாளனை விடுவிப்பது பற்றி குடியரசுத் தலைவர் தான் முடிவெடுக்க வேண்டும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 7 பேர் விடுதலை தொடர்பாக, குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரான பேரறிவாளன் தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, பேரறிவாளன் விடுதலை தொடர்பாக யார் முடிவெடுக்க வேண்டும் என்பது குறித்த சிக்கலுக்குத் தீர்வு காண வேண்டும் என்றும், பேரறிவாளனை விடுதலை செய்வது குறித்து குடியரசுத் தலைவர்தான் முடிவெடுக்க வேண்டும் என்றும் மத்திய அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

அதேவேளையில், பேரறிவாளன் உள்ளிட்டோரை விடுதலை செய்வது குறித்து மாநில ஆளுநர் முடிவெடுக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக மத்திய அரசு எந்த மனுவும் தாக்கல் செய்யவில்லை என்று பேரறிவாளன் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.