பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை தொடர்பாக முக்கிய முடிவு வெளியாக வாய்ப்பு!

president day tamilnadu judgement
By Jon Jan 29, 2021 05:17 PM GMT
Report

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை தொடர்பாக ஆளுநர் தரப்பில் முக்கிய அறிவிப்பு வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ராஜீவ்காந்தி கொலை வழக்கில் பல ஆண்டுகளாக சிறையில் உள்ள பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை தமிழக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்று ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பியிருந்தது.

இந்தத் தீர்மானத்தின் மீது ஆளுநர் இரண்டு வருடங்களுக்கும் மேலாக முடிவெடுக்காமலே இருந்து வருகிறார் இந்நிலையில் எழுவரை விடுதலை செய்ய உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது/ இந்த வழக்கில் விடுதலை தீர்மானம் குறித்து ஆளுநர் 7 நாட்களில் முடிவெடுக்க வேண்டும் என சமீபத்தில் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் ஆளுனர் அலுவலக அலுவலர் மத்திய அரசை சந்தித்து எழுவர் விடுதலை குறித்து ஆலோசனை மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மத்திய அரசுடனான ஆலோசனையை தொடர்ந்து எழுவர் விடுதலை குறித்த முக்கிய அறிவிப்பு இன்று அல்லது நாளை வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

உச்சநீதிமன்றம் ஆளுநருக்கு வழங்கியிருந்த ஒரு வார கால அவகாசம் இன்றுடன் நிறைவடைகிறது.