பேரறிவாளன் விடுதலையில் ஆளுநர் ஏழு நாட்களில் முடிவு எடுப்பார்: மத்திய அரசு தகவல்
முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை தண்டிக்கப்பட்டு சிறையில் உள்ள பேரறிவாளன் உள்ளிட்ட எழுவர் விடுதலை விவகாரம் தற்போது வரை தீராத சிக்கலாக இருந்து வருகிறது. எழுவரை விடுதலை செய்ய மாநில அரசுக்கே அதிகாரம் உள்ளது என தெளிவுபடுத்தி உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்தது.
அதனைத் தொடர்ந்து எழுவரையும் விடுதலை செய்ய தீர்மானத்தை நிறைவேற்றி ஒப்புதல் பெற ஆளுநருக்கு அனுப்பியிருந்தது தமிழக அரசு. ஆனால் அந்த தீர்மானத்தின் மீது இரண்டு வருடங்களாக ஆளுநர் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை..
இந்த விவகாரம் மீண்டும் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. தன்னை விடுதலை செய்யக்கோரி ஆளுநருக்கு உத்தரவிட வேண்டும் என்று பேரறிவாளன் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கில் பேரறிவாளன் விடுதலையில் ஆளுநர் இன்னும் மூன்று நாட்களில் முடிவெடுப்பார் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.