பேரறிவாளனுக்கு 30 நாட்கள் விடுப்பு: முதல்வர் உத்தரவு
பேரறிவாளனுக்கு 30 நாட்கள் சாதாரண விடுப்பு வழங்கி முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் கைதியாக சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள பேரறிவாளன், உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார்.
அவர் உடல் நிலையைக் கருத்தில் கொண்டு அவருக்கு நீதிமன்றம் பல முறை பரோல் தந்துள்ளது.
இந்த நிலையில், பேரறிவாளன் சிறுநீரக நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதால் அவருக்கு கொரோனா தொற்று எளிதில் பரவும் அபாயம் இருப்பதாலும் அவருக்கு நீண்ட விடுப்பு வழங்கிட வேண்டும் என அவரது தாயார் அற்புதம்மாள் நேற்று முதல்வர் ஸ்டாலினுக்குக் கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்நிலையில், பேரறிவாளனுக்கு, உரிய விதிகளைத் தளர்த்தி, 30 நாட்கள் சாதாரண விடுப்பு வழங்கி முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.