பேரறிவாளன் விடுதலை வழக்கு: நாளை உச்சநீதிமன்றத்தில் இறுதி விசாரணை
ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டு சிறையில் உள்ள பேரறிவாளன் உள்ளிட்ட எழுவரின் விடுதலை தமிழகத்தில் நீண்ட காலமாக தீர்க்கப்படாத அரசியல் பிரச்சனையாக இருந்து வருகிறது. எழுவர் விடுதலை தொடர்பாக தமிழக அரசு நிறைவேற்றிய தீர்மானம் ஆளுநர் அனுமதி பெற இரண்டு வருடங்களாக காத்துக்கிடக்கிறது.
இந்நிலையில் எழுவர் விடுதலை விவகாரம் தொடர்பாக ஆளுநர் இதற்கு மேலும் காலம் தாழ்த்த முடியாது என உச்சநீதிமன்றம் கடந்த நவம்பர் மாதம் தெரிவித்திருந்தது. தன்னை விடுதலை செய்யக்கோரி பேரறிவாளன் தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நாளை இறுதி விசாரணைக்கு வர இருக்கிறது.
ஆளுநர் முடிவெடுப்பதற்கு முன்பாக நீதிமன்றமே அவர்களை விடுதலை செய்ய உத்தரவிடலாம் எனச் சொல்லப்பட்டு வருகிறது. இந்த வழக்கில் விரைவில் தீர்வு எட்டப்படுமா என்பதே பலரின் எதிர்பார்ப்பாக உள்ளது.