பேரறிவாளன் மருத்துவமனையில் அனுமதி

perarivalan
By Fathima Aug 12, 2021 07:50 AM GMT
Report

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு தற்போது பரோலில் வெளியே உள்ள பேரறிவாளன் சிறுநீரக தொற்று உள்ளிட்ட பிரச்சனைகள் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன் (49). சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில், கொரோனா பரவல் காரணமாக பேரறிவாளனுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும் என்பதால் அவருக்கு 30 நாட்கள் பரோல் வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு அவரது தாயார் அற்புதம்மாள் கடந்த ஏப்ரல் மாதம் கோரிக்கை விடுத்தார்.

இதனையேற்ற தமிழக அரசு, 30 நாட்கள் பரோல் வழங்கி உத்தரவிட்டது, இதன்படி கடந்த மே மாதம் 28-ம் தேதி பரோல் பேரறிவாளன் தன்னுடைய வீட்டுக்கு வந்தார்.

பரோல் காலம் முடிந்து பேரறிவாளன் கடந்த ஜூன் மாதம் 28-ம் தேதி மீண்டும் சிறைக்கு செல்ல இருந்தபோது, பரோல் காலத்தை மேலும் நீடிக்க வேண்டும் என அவரது தாயார் அற்புதம்மாள் தமிழக அரசுக்கு விடுத்த கோரிக்கை வைத்தார்.

இதனையடுத்து பேரறிவாளனுக்கு மேலும் ஒரு மாதம் பரோல் நீட்டிக்கப்பட்டது, இந்நிலையில் தற்போது சிறுநீரக தொற்று உட்பட உடல்நல பிரச்சனைகளுக்காக விழுப்புரத்தில் உள்ள மருத்துவமனையில் பேரறிவாளன் அனுமதிக்கப்பட்டுள்ளார்.