வாக்காளர் பட்டியலில் இடம்பெற்ற பேரறிஞர் அண்ணா

india politician annadurai
By Jon Jan 25, 2021 03:26 PM GMT
Report

திருத்தப்பட்ட வாக்காளர் பட்டியலில் பேரறிஞர் அண்ணா அவர்களின் புகைப்படம் இடம்பெற்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் ஆணையம் கடந்த 20ம் தேதி திருத்தப்பட்ட வாக்காளர் பட்டியலை வெளியிட்டது.

காஞ்சிபுரம் வடக்கு மாவட்டத்துள் யக்க ஆலந்தூர், திருப்பெரும்புதூர், பல்லாவரம், தாம்பரம், செங்கல்பட்டு, திருப்போரூர் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளுக்கான வாக்காளர் பட்டியலை கழகத்தினர் சரிபார்க்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் திருப்பெரும்புதூர் தொகுதியில் அடங்கிய நந்தம்பாக்கம் ஊராட்சி வாக்காளர் பட்டியலை கழகத்தினர் சரிபார்த்த போது பாகம் எண் - 109 தொடர் எண் 220-ல் வீரராகவன் என்ற வாக்காளர் பெயரும், அதற்கு நேராக மறைந்த முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணா அவர்களின் புகைப்படம் இடம் பெற்றிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

தி.மு.க.வைச் சேர்ந்த வாக்காளர் வீரராகவன் புகைப்படத்துக்கு பதில் பேரறிஞர் அண்ணா அவர்களின் புகைப்படம் எப்படி வெளியானது என்பது தெரியவில்லை. இது போன்ற வாக்காளர் பட்டியல் குளறுபடிகளை உடனே தேர்தல் ஆணையம் சரி செய்திட வேண்டும் என்று மாவட்ட தி.மு.க. செயலாளர் தா.மோ.அன்பரசன் வலியுறுத்தி கேட்டுக்கொண்டுள்ளார்.