சன்னி லியோன் பக்கத்துல உக்காந்திருக்காங்க. ஆனால் முடியல - பேரரசு வேதனை
சன்னி லியோனிடம் பேச ஹிந்தி கற்றுக்கொள்ள வேண்டும் என பேரரசு பேசியுள்ளார்.
பேட்ட ராப்
எஸ். ஜெ. சினு இயக்கத்தில், பிரபுதேவா, வேதிகா, சன்னி லியோன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள பேட்ட ராப் திரைப்படம் செப்டம்பர் 27ஆம் தேதி திரைக்கு வர உள்ளது.
திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா, சென்னை வடபழனியில் உள்ள நட்சத்திர விடுதியில் நேற்று நடைபெற்றது. இதில் பிரபுதேவா, வேதிகா, சன்னி லியோன், பேரரசு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பேரரசு
இந்த நிகழ்வில் பேசிய இயக்குநர் பேரரசு, "ரெண்டு மூணு வருஷத்துக்கு முன்னாடி இந்தி தெரியாது போடான்னு சொல்வாங்க. கேட்க சந்தோசமா இருந்துச்சு. அப்புறம் அதே வாசகத்தோடு டீ-சர்ட்டும் போட்டாங்க. அத பார்க்கும் போதும் சந்தோசமா இருந்துச்சு. ஆனா இப்போ கவலையா இருக்கு.
என் பக்கத்துல சன்னி லியோன் உட்காந்திருக்காங்க. ரெண்டு வார்த்த இந்தியில் பேச முடியல. இதுக்காகவே இந்தி கத்துக்க வேண்டும். தமிழை மட்டும் தெரிந்து வைத்துக் கொண்டு பல்வேறு இழப்பைச் சந்திக்க வேண்டியதாக உள்ளது.” என பேசினார்.
இவரின் பேச்சு சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.