மனைவியின் சடலத்தின் அருகே தூங்கிய கணவன் - கதறிய குழந்தை! என்ன நடந்தது?
கரூரில் மனைவி துடிதுடிக்க தூங்கில் தொங்கும் போது, கணவரோ குறட்டை விட்டு தூங்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெரம்பலூர் மாவட்டம் பாடலூரை சேர்ந்த தனசேகரனும், கரூர் மாவட்டம் மாயனூரை சேர்ந்த மாலதியும் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு 4 வயதில் ஒரு குழந்தை உள்ளது.

வேலூரில் உள்ள தனியார் போதை ஒழிப்பு மையத்தில் மேலாளராக பணியாற்றி வரும் தனசேகரன், போதைக்கு அடிமையான ஒரு போதை ஆசாமியாவார். இதனால் கணவன், மனைவிக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
வழக்கம் போல கடந்த 9-ம் தேதியும் போதையில் வந்த தனசேகரன், தன்னை மறந்து குறட்டை விட்டு தூங்கியுள்ளார். இதனால் மனவேதனையடைந்த மனைவி, கணவன் தூங்கி கொண்டிருக்கும் அறையிலேயே மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

குழந்தையின் கதறல் சத்தத்தை கேட்டு வீட்டிற்குள் வந்த
அக்கம்பக்கத்தினர், மாலதி தூக்கிட்ட நிலையில் உயிரிழந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், மாலதியின் சடலத்தை மீட்டு, போதையில் தூங்கி கொண்டிருந்த தனசேகரனை கைது
செய்தனர்.
இலங்கையில் முதன் முறையாக பயன்படுத்தப்பட்ட அதிக சக்திவாய்ந்த வெடிபொருள்! ஈஸ்டர் வழக்கில் ஜமைக்காவில் இருந்து வழங்கப்பட்ட சாட்சியம் IBC Tamil
ஈஸ்டர் சதியுடன் தொடர்புடையவர்கள் வெளியே உள்ளனர்! 6-வது குற்றவாளி வெளியிட்ட பரபரப்பான கருத்து IBC Tamil