பணத்த எடுத்ததுக்காக இவ்வளோ பெரிய தண்டனையா?; 10 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழப்பு! அவள் அனுபவித்த சித்திரவதை என்னனு தெரியுமா?
70 ரூபாயை யாருக்கும் தெரியாமல் எடுத்து செலவுசெய்த சிறுமிக்கு தாய் சூடு வைத்து சித்திரவதை செய்ததால் சிறுமி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெரம்பலூர் மாவட்டம், அரும்பாவூர் காவல்துறை சரகத்திற்கு உட்பட்ட வேப்பந்தட்டை திடீர் குப்பம் பகுதியை சேர்ந்தவர் ராஜா (32) கல்லுடைக்கும் தொழிலாளி.
இவர்களது மகள் மகாலட்சுமி (10). வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வருகிறார். சிறுமி மகாலட்சுமி சரிவர பள்ளிக்கு செல்லாமலும் வீட்டிலிருந்த பணத்தை எடுத்து செலவு செய்தும் வந்துள்ளார் என கூறப்படுகிறது.
இதனால் தாய் மணிமேகலை சிறுமியை அடிக்கடி கண்டித்து வந்துள்ளார். கடந்த 6-ஆம் தேதி தனது பெரியப்பா முருகன் வீட்டில் 70 ரூபாயை யாருக்கும் தெரியாமல் எடுத்து செலவு செய்துள்ளார்.
இது பற்றி தாய் மணிமேகலைக்கு தெரியவரவே அன்று மாலையே சிறுமி மகாலட்சுமியை கண்டிக்க நெருப்பில் வரமிளகாயை போட்டு அந்த புகையை கட்டாயப்படுத்தி முகர வைத்துள்ளார்.
மேலும் வாயிலும் வலது தொடையிலும் சூடு வைத்துள்ளார். இச்சம்பவத்திற்கு சிறுமியின் அப்பா மற்றும் உறவினர்கள் உடந்தையாக இருந்துள்ளனர் என தெரியவந்துள்ளது.
இதில் சிறுமியின் உடல்நிலை மிகவும் மோசமானதால் நேற்று முன்தினம் 8-ம் தேதி கிருஷ்ணாபுரம் அரசு மருத்துவமனையில் முதல் சிகிச்சை பெற்று
மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் உள் நோயாளியாக சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
இந்நிலையில் அரசு மருத்துவர்கள் சிறுமியை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கபட்டு தொடர் சிகிச்சை அளிக்கபட்டு வந்தது. தொடர்ந்து சிறுமியின் உடல்நிலையில் முன்னேற்றம் காணபடவில்லை.
இதனால் சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிர் இழந்தார்.
தகவலறிந்த அரும்பாவூர் காவல்துறை இன்ஸ்பெக்டர் பாலசுப்ரமணியம் வழக்குப்பதிவு செய்து தாய் மணிமேகலை உறவினர் மல்லிகா ஆகியோரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சிறுமி செய்த குற்றத்திற்காக பெற்ற தாயே சூடு வைத்து சித்ரவதை செய்ததொடு கொடூரமாக மிளகாய்பொடியை புகைப்பிடிக்க செய்த சம்பவம் வேப்பந்தட்டை சுற்றுவட்டார பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.