முதல்வர் வீட்டிற்கு முகத்தை மூடி வந்தது யார்? விஜய்க்கு நேராக பிரேமலதா கேள்வி

Vijay Premalatha Vijayakanth
By Karthikraja May 13, 2026 06:12 AM GMT
Report

முதல்வர் வீட்டிற்கு முகத்தை மூடி வந்தது யார் என பிரேமலதா விஜயகாந்த் கேள்வி எழுப்பியுள்ளார்.

நம்பிக்கை வாக்கெடுப்பு

விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு இன்று சட்டமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

நம்பிக்கை கோரும் தீர்மானத்தை முதலமைச்சர் விஜய் முன்மொழிய, அனைத்து கட்சி உறுப்பினர்களும் தீர்மானம் மீது பேசி வருகின்றனர். 

முதல்வர் வீட்டிற்கு முகத்தை மூடி வந்தது யார்? விஜய்க்கு நேராக பிரேமலதா கேள்வி | Peramalatha Questions Cm Vijay Who Hide Face

விசிக உள்ளிட்ட கட்சிகள் தவெகவிற்கு ஆதரவளிப்பதாக பேசினாலும், ஜோதிடம் போன்ற மூட நம்பிக்கைளுக்கு அரசு முன்னுரிமை தரக்கூடாது. மூட நம்பிக்கைளுக்கு எதிரான சட்டத்தை பேரவையில் நிறைவேற்ற வேண்டும் என பேசினர்.

விஜயின் ஜோதிடரான ரிக்கி ராதன் பண்டிட் வெற்றிவேல், நேற்று முதலமைச்சரின் அரசியல் பிரிவு சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

பிரேமலதா விஜயகாந்த் கேள்வி

இந்நிலையில், தீர்மானத்தின் மீது பேசிய தேமுதிக எம்எல்ஏ பிரேமலதா விஜயகாந்த், முதலமைச்சர் அன்னைக்கு சொன்னாரு. இங்கு முகத்தை மூடி யாரும் செல்ல வேண்டியதில்லை. அனைவருக்கும் வெளிப்படையான ஆட்சி செய்வோம் என்று. 

முதல்வர் வீட்டிற்கு முகத்தை மூடி வந்தது யார்? விஜய்க்கு நேராக பிரேமலதா கேள்வி | Peramalatha Questions Cm Vijay Who Hide Face

அப்படியிருக்கையில், முதல்வரை சந்திக்க முகத்தை மூடிக்கொண்டு வாகனத்தில் வந்தது யார் என்பதை நிச்சயமாக மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.

அதற்கு காரணம் குதிரை பேரம் என்றால் இதைவிட ஒரு தலைகுனிவு இந்த வரலாற்று சிறப்புமிக்க அவையில் எதுவும் கிடையாது. நிச்சயம் இதற்கு முதல்வர் பதில் சொல்வார் என எதிர்பார்க்கிறேன்.

அதே போல், அரசுக்குடும்பத்திலிருந்து நான் வந்தவன் இல்லை என்று முதல்வர் சொன்னபோது அனைவரும் அதை வரவேற்றார்கள். ஆனால் முதல்வர் தன்னுடைய ராஜகுருவான ரிக்கி ராதன் பண்டிட் வெற்றிவேல் என்பவரை முதலமைச்சரின் அரசியல் பிரிவு சிறப்பு அதிகாரியாக, அரசு பதவியில் நியமித்ததை தமிழக மக்களின் சார்பில் இந்த அவையில் கண்டிக்கிறேன்.

உங்களுக்கு ராஜகுருவாக இருந்தால் அதை பெர்சனலாக வைத்துக்கொள்ளுங்கள். ஆனால் அவரை அரசு உயர்பதவியில் கொண்டு இளைஞர்கள் நம்பி மக்கள் வாக்களித்துள்ளார்கள். இந்த இளைஞர்களுக்கு நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்? என பேசியுள்ளார்.