மிளகு விலை இருமடங்கு உயர்வு...விவசாயிகள் மகிழ்ச்சி!

Pepper High Price
By Thahir Jul 06, 2021 06:00 AM GMT
Report

மிளகு வரத்து குறைவால் இருமடங்கு உயர்ந்து கிலோ ரூ.500 வரை விற்கப்படுவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

மிளகு விலை இருமடங்கு உயர்வு...விவசாயிகள் மகிழ்ச்சி! | Pepper Highprice

திண்டுக்கல் அருகே உள்ளது சிறுமலை. இந்த சிறுமலை 55000 ஏக்கர் பரப்பளவைக் கொண்டதாக உள்ளது.இங்கு 5000க்கும் மேற்பட்ட குடியிருப்பு வாசிகள் வசித்து வருகின்றனர். இங்கு விளையும் சிறுமலை வாழை, பலா உள்ளிட்ட பழ வகைகள் மிகுந்த சுவையுள்ளது.

இங்கு காப்பி, மிளகு உள்ளிட்ட வாசனை பொருட்கள் பணப்பயிராக விளைகின்றன. ஒரு ஏக்கர் 2 ஏக்கர் உள்ள சிறு குறு விவசாயிகள் இங்கு அதிகம் வசிக்கிறார்கள். கடந்த காலத்தில் போதிய மழை இன்மையாலும் வெயிலில் தரமற்ற மிளகு விளைந்து 1 கிலோ 200 ரூபாய்க்கு மட்டும் விற்பனை ஆகியது. இதனால் விலை மூன்று ஆண்டுகளாக வீழ்ச்சியடைந்து காணப்பட்டது.

இந்நிலையில் கடந்த சில மாதங்களாக நல்ல மழை பெய்ததன் காரணமாக தரமான மிளகு விளைந்துள்ளன. ஆனால் பருவ மழை பெய்ததன் காரணமாகவும் பூ மற்றும் பிஞ்சுகள் உதிர்ந்தன் காரணமாகவும் விளைச்சல் குறைந்தாலும் மிளகு விலை இரு மடங்காக உயர்ந்து கிலோ ரூ.500க்கு விற்கப்படுகிறது. நல்ல விலை கிடைக்கும் போது மிளகின் வரத்து குறைந்ததால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.