அமைச்சர் பொன்முடி மீது சேறு வீச்சு - பொதுமக்கள் ஆவேசம்

K. Ponmudy Cyclone Viluppuram
By Karthikraja Dec 03, 2024 09:00 AM GMT
Report

 பேச்சுவார்த்தை நடத்த சென்ற அமைச்சர் பொன்முடி மீது பொதுமக்கள் சேறை வீசியுள்ளனர்.

ஃபெஞ்சல் புயல்

வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் காரணமாகத் தமிழகத்தின் பல்வேறு வட மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. 

fengal cyclone affect

புயல் கரையை கடந்தாலும் மழை பெய்து வரும் நிலையில், கடலூர், விழுப்புரம், கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் வீடுகளை சூழ்ந்துள்ள வெள்ளம் இன்னும் வடியவில்லை.

அமைச்சர் மீது சேறு

பேரிடர் மீட்பு படையினர் வெள்ளத்தில் சிக்கியுள்ள மக்களை மீட்டு வருகின்றனர். குடிநீர், உணவு கிடைக்கவில்லை என பல்வேறு பகுதிகளில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் சாலை மறியலில் ஈடுபட்டு வரும் விழுப்புரம் இருவேல்பட்டு பகுதி மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்த அமைச்சர் பொன்முடி, அவரது மகனும் முன்னாள் எம்.பியுமான கவுதம சிகாமணி ஆகியோர் சென்றனர். 

அரசு சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவில்லையென்றும் வெள்ளத்திற்கு பிறகும் போதிய உதவிகள் கிடைக்கவில்லையென்றும் ஆவேசமாக வாக்குவாதம் செய்த மக்கள், அமைச்சர் பொன்முடி மீது சேறை வீசினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து அமைச்சர் பொன்முடி, முன்னாள் எம்.பியுமான கவுதம சிகாமணி ஆகியோர் அந்த இடத்திலிருந்து வெளியேறினர்.