பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரம் - பல்பீர் சிங் புகைப்படத்தை வைத்து மக்கள் வழிபாடு
விசாரணைக்கு அழைத்துச் செல்லப்படுவோரின் பற்களை ஏஎஸ்பி பிடுங்கியதாக எழுந்த நிலையில் ,பல்பீர் சிங்கின் புகைப்படத்தை கோவிலில் வைத்து மக்கள் பிரார்த்தனை செய்துள்ளனர்.
பற்கள் பிடுங்கிய விவகாரம்
திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் கோட்டத்தில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்படுவோரின் பற்களை பிடுங்கியதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் ஏஎஸ்பி பல்பீர் சிங் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை அளிக்க சேரன்மாதேவி சார் ஆட்சியர் முகமது சபீர் ஆலத்துக்கு திருநெல்வேலி ஆட்சியர் கார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார்.
இதையடுத்து சேரன்மகாதேவி சார் ஆட்சியர் அலுவலகத்தில் பாதிக்கப்பட்டவர்கள் ஆஜராகி சாட்சிம் அளித்து வருகின்றனர்.
பல்பீர் சிங் புகைப்படத்தை வைத்து பூஜை
சார் ஆட்சியர் முன்னிலையில் ஆஜர் ஆன 5 பேர் சாட்சியம் அளித்தனர். மாநில மனித உரிமை ஆணையமும் தனியாக விசாரணை நடத்தி வருகின்றது.
இந்த நிலையில், முப்புடாதி அம்மன் கோயிலில் அம்மன் சிலையின் பாதத்தில் ஏஎஸ்பி பல்வீர் சிங்கின் படத்தை வைத்து அவருக்கு, மீண்டும் பணி கிடைக்க வேண்டி சிறப்பு பூஜையை மக்கள் நடத்தினர்.