ஜி20 மாநாட்டிற்காக சாலையில் அலங்கரிக்கப்பட்ட பூந்தொட்டிகளை திருடிய நபர்கள் - வைரலாகும் வீடியோ...!

Viral Video India
By Nandhini Feb 28, 2023 10:20 AM GMT
Report

ஜி20 மாநாட்டிற்காக சாலையில் அலங்கரிக்கப்பட்ட பூந்தொட்டிகளை திருடிய நபர்களின் வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

பூந்தொட்டிகளை திருடிய நபர்கள்

சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், குருகிராம் நகரில் ஜி20 மாநாட்டில் பங்கேற்க உள்ளது. இதனால், இந்த ஜி20 மாநாட்டிற்கு வெளிநாட்டு பிரதிநிதிகள் வருகை தர உள்ளனர்.

இதற்காக சாலைகளில் அலங்காரத்திற்காக பூந்தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. இந்த பூந்தொட்டிகளை காரில் வந்த 2 நபர்கள் பூந்தொட்டிகளை திருடி காரில் ஏற்றிச் சென்றுள்ளனர். இதை அங்கிருந்தவர்கள் யாரோ வீடியோவாக எடுத்து சமூகவலைத்தளங்களில் வெளியிட்டனர்.

தற்போது இது தொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த நெட்டிசன்கள் அட பாவிகளா... நல்லா வசதியாதானே இருக்கீங்க... இந்த பூந்தொட்டிகளை திருடிச் செல்கிறீர்களே என்று விளாசி கமெண்ட் செய்து வருகின்றனர். 

people-who-stole-flower-pots-g20-gurugram