எலக்ஷன் வந்தால்தான் எங்களை தெரியுது..பாஜக ச.ம.உறுப்பினரை கழிவுநீரில் நடக்க வைத்த மக்கள்!
தங்கள் கிராமத்தில் எந்த வசதியும் இல்லாமல் இருப்பதை உணர்த்த பாஜக எம்.எல்.ஏவை பொதுமக்கள் கழிவுநீரில் நடக்க வைத்த சம்பவம் நடந்துள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் தற்போது தேர்தல் நடைபெற உள்ளதால் சட்டமன்ற உறுப்பினர்கள் பலரும், தற்போது மீண்டும் தொகுதி மக்களை சந்தித்து வருகின்றனர்.
அந்தவகையில் உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள ஹபூர் தொகுதியை சேர்ந்த பாஜக எம்.எல்.ஏ கமல் மாலிக், தனது தொகுதிக்கு உட்பட்ட தோல்பூர் என்ற கிராமத்திற்கு சென்றுள்ளார்.
அப்போது அவரை முற்றுகையிட்ட கிராமத்தினர் தங்களது கடுமையான எதிர்ப்புகளை தெரிவித்தனர்.
#UttarPradesh : हापुड़ के गांव में बीजेपी विधायक कमल मलिक पदयात्रा के दौरान पहुंचे तो जनता ने उनका विरोध किया और विधायक को सड़क पर जमा सीवर के पानी में चलवाया। pic.twitter.com/7YMuv9augN
— Hindustan (@Live_Hindustan) July 30, 2021
மேலும், வெற்றி பெற்றதில் இருந்து தற்போது வரை ஒரு நாள் கூட வந்து எங்களை பார்க்கவில்லை. தொகுதிக்கு தேவையான எந்த வசதியையும் செய்து கொடுக்கவில்லை தற்போது எதற்கு வந்துள்ளீர்கள்? என கேள்வி எழுப்பினர்.
அதோடு தங்களது கிராமத்தின் அவல நிலையை உணர்த்த, வீதியில் தேங்கியிருந்த கழிவுநீரில் அவரை செருப்பில்லாமல் நடந்து போகச் சொல்லி, அவரது செருப்பை கழட்டி தூக்கி எறிந்தனர்
கிராம மக்களின் கோபத்தை உணர்ந்த எம்.எல்.ஏ கமல் மாலிக் வெறும் காலால் கழிவுநீரில் நடந்து சென்றார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.