மக்களின் தண்ணீர் பாட்டில்களில் எச்சிலை துப்பிய எம்.பி. பத்ருதீன் அஜ்மல் - வீடியோ வைரல்!

people water badruddin ajmal assam
By Jon Apr 07, 2021 04:48 PM GMT
Report

அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணியின் எம்.பி.யான மவுலானா பத்ருதீன் அஜ்மல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட செயல் தற்போது பெரும் சர்ச்சையையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. பேரணிகளில், மக்கள் வைத்திருக்கும் தண்ணீரில் எச்சில் துப்பிய வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வேகமாக பரவி வைரலாகி வருகிறது.

நேற்று அசாம் மாநிலத்தில் சட்டமன்ற பொதுத் தேர்தல் நடைபெற்று முடிந்தது. இந்நிலையில் ஆளும் பாஜகவிற்கு எதிராக, காங்கிரஸ் கட்சி, இஸ்லாமிய கட்சியான அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணியுடன் இணைந்து தேர்தலை எதிர்கொண்டது. இதில் ஆரம்பம் முதலே பத்ருதீன் அஜ்மல் சர்ச்சைக்குரிய வகையில் பேசி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், தேர்தல் பேரணிகளில் உரையாற்றிய அஜ்மல், பிரார்த்தனை செய்து, தனது பக்தர்களால் கொண்டுவரப்பட்ட ஏராளமான தண்ணீர் பாட்டில்களில் எச்சினை துப்பினார். அஜ்மல் துப்பிய தண்ணீர் நோய்களை குணப்படுத்தும் விளைவைக் கொண்டிருப்பதாக மக்கள் நம்பு வருகின்றனர்.  

இது தொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. இது எப்போது எடுக்கப்பட்டது என்பது சரியாகத் தெரியவில்லை என்றாலும், தற்போதைய சட்டமன்றத் தேர்தலுக்காக அசாம் தேர்தல் பிரச்சாரத்தில் எடுக்கப்பட்ட வீடியோ என்பது பார்க்கும்போதே தெரிந்து விடுகிறது.

கொரோனா காலத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் இதுபோன்ற செயல் எப்படி அனுமதிக்கப்பட்டது என்பது தெரியவில்லை. இந்த வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது.