எளிய மக்களுக்கு இரண்டு மாத மின்கட்டணம் விலக்கு வேண்டும்: சீமான் கோரிக்கை!

seeman tamilnadugoverment
By Irumporai Jun 14, 2021 04:38 PM GMT
Report

தமிழகத்தில்  ஊரடங்கு காரணமாக மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதால்  இரண்டு மாதங்கள் மின் கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார் .

நாம் தமிழர் கட்சித்தலைவர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில்:

அன்றாடம் வேலைக்கு சென்று கிடைக்கும் சொற்ப வருவாயை ஈட்டும் எளிய மக்கள் கடந்த இரண்டு மாத காலமாக எவ்வித வருமானமும் இன்றி வீட்டு வாடகை உணவு குடிநீர் மருத்துவம் முதலியை அடிப்படை தேவைகளை கூட நிறைவேற்றிக்கொள்ள முடியாமல் தவித்து வருகின்றனர்.

   இந்த நெருக்கடியான  காலத்தில் அவர்களுக்கு உறுதுணையாய் நின்று, அடுத்து இரண்டு மாதங்கள் மின் கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்