அதிகரிக்கும் சுவாசத் தொற்று.., மருத்துவமனைக்கு வரும் மக்கள் முகக்கவசம் அணிய அறிவுறுத்தல்

viral disease
By Yashini Sep 24, 2026 08:39 AM GMT
Report

தமிழகத்தில் சமீப காலமாக பருவநிலை மாற்றம் உள்ளிட்ட காரணங்களால் பல்வேறு தொற்று நோய்கள் பரவி வருகின்றன.

குறிப்பாக டெங்கு, கொரோனா, சின்னம்மை, கூகைக்கட்டு அம்மை மற்றும் ஸ்கிரப் டைபஸ் எனப்படும் உண்ணிக்காய்ச்சல் பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன.

இதில் சில தொற்று நோய்கள் சுவாசம் மூலம் ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு எளிதாகப் பரவும் தன்மை கொண்டவை.

இந்நிலையில், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக வரும் பலரும் முகக்கவசம் அணிவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

அதிகரிக்கும் சுவாசத் தொற்று.., மருத்துவமனைக்கு வரும் மக்கள் முகக்கவசம் அணிய அறிவுறுத்தல் | People Visiting Hospitals Must Wear Face Masks

இதுகுறித்து பொது சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில், தமிழகத்தில் டெங்குவை விட சுவாசத் தொற்று பாதிப்புகள் அதிகளவில் காணப்படுகின்றன.

இந்த தொற்றுகள் ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு எளிதாக பரவும். மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகள் மற்றும் அவர்களது உறவினர்கள் பலரும் முகக்கவசம் அணிவதில்லை.

முகக்கவசம் அணிவது கட்டாயம் இல்லை என்றாலும், மருத்துவமனைகள் மூலமாகவும் தொற்று பரவும் வாய்ப்புள்ளது.

எனவே, தொற்று பரவலைத் தடுக்க அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு வரும் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் என பொது சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.