கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட 7 பேர் ரத்தம் உறைந்து பலி
அஸ்ட்ரா ஜெனேகா நிறுவனத்தின் தடுப்பூசியை போட்டுக்கொண்ட 7 பேர் ரத்தம் உறைந்து பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கொரோனாவை தடுப்பதற்கு இங்கிலாந்து நாட்டின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும், பன்னாட்டு மருந்து நிறுவனமான அஸ்ட்ரா ஜெனெகாவும் இணைந்து ஒரு தடுப்பூசியை உருவாக்கின.
கொரோனாவுக்கான மற்ற தடுப்பூசிகளை மிகவும் குளிரான நிலையில்தான் சேமித்து வைக்க முடியும். ஆனால் அஸ்ட்ரா ஜெனெகா தடுப்பூசியை சாதரணமாக ஃபிரிட்ஜிலேயே சேமித்து வைக்க முடியும். அத்துடன், இந்த தடுப்பூசி வயதானவர்கள் மற்றும் இளையவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குவதாக தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், அஸ்ட்ரா ஜெனெகா தடுப்பூசியை செலுத்தி கொண்ட 30 பேருக்கு ரத்த உறைவு ஏற்பட்டுள்ளது என்றும், இதில் 7 பேர் உயிரிழந்துள்ளதாகவும் இங்கிலாந்து மருத்துவ ஒழுங்குமுறை அமைப்பு தெரிவித்துள்ளது.
இதனால் தற்போது உலகம் முழுவதும் அஸ்ட்ரா ஜென்கா நிறுவனத்தின் மருந்தை ஆர்டர் செய்த நாடுகள் அதிர்ச்சி அடைந்துள்ளன.