இறந்தவர்களின் படுக்கையில் இருந்து திருடப்பட்ட ஆக்சிஜன் சிலிண்டர்கள்- நேரில் பார்த்தவரின் கண்ணீர் பேட்டி

nashik oxygen leak
By Fathima Apr 22, 2021 09:44 AM GMT
Report

மகாராஷ்டிராவின் நாசிக்கில் உள்ள மருத்துவமனையில் ஆக்சிஜன் நிரம்பும் போது எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட கசிவால் பலியானவர்களின் எண்ணிக்கை 24ஆக உயர்ந்துள்ளது.

நாசிக் மாவட்டத்தில் உள்ள ஜாகிர் உசேன் மருத்துவமனையில் டேங்கரில் இருந்து சிலிண்டர்களுக்கு ஆக்சிஜன் வாயு மாற்றப்பட்டு நோயாளிகளின் சிகிச்சைக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் நேற்று தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஆக்சிஜன் வாயு கசிந்ததில், சுமார் அரை மணிநேரம் ஆக்சிஜன் இணைப்பு துண்டிக்கப்பட்டது.

இந்த விபத்தில் மொத்தம் 24 பேர் பலியாகியுள்ளன, அந்நேரத்தில் 131 நோயாளிகள் ஆக்சிஜன் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்ததாகவும், 15 பேர் வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்ற

இச்சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், சம்பவத்தை நேரில் பார்த்த நபர் ஒருவர் நடந்ததை கண்ணீருடன் NDTV க்கு  பேட்டியளித்துள்ளார்.   



நாசிக் மருத்துவமனை விபத்தில் பலியான ஒருவரில் 23 வயதான Vicky Jadhav என்பவரது பாட்டி Sugandha Thorat-ம் அடங்குவார்.

தங்களது கண்முன்னே உயிருக்கு உயிரான உறவுகள் பலியானதாக தெரிவிக்கும் Vicky Jadhav, இறந்தவர்களின் படுக்கையில் இருந்த ஆக்சிஜன் சிலிண்டர்கனை மக்கள் எடுத்துச்செல்வதை பார்த்ததாக தெரிவித்துள்ளார்.

அதை வைத்தாவது தன்னுடைய உறவுகளுக்கு ஆக்சிஜன் வழங்க முடியும், அவர்கள் உயிர் பிழைத்துக் கொள்வார்கள் என நம்பிக்கையில் மக்கள் செய்ததாக உருக்கத்துடன் தெரிவிக்கிறார்.

தன்னுடைய பாட்டியை பார்க்க 10 மணியளவில் சென்றதாகவும், ஆனால் ஆக்சிஜன் இல்லாமல் அவர் உயிருக்கு போராடிக் கொண்டிருந்ததாகவும் விவரிக்கிறார்.

உடனடியாக மருத்துவமனை ஊழியர்களை அழைத்து பேசிய போதே, இந்த விபரீத சம்பவம் நடந்ததாகவும், தானும் இறந்தவர்களிடமிருந்து ஆக்சிஜன் சிலிண்டர்களை எடுத்துக்கொண்டு போய் தன்னுடைய பாட்டிக்கு சிகிச்சை அளித்த போதும் பலனில்லாமல் போனது என தெரிவித்துள்ளார்.

பலரும் தங்களது உறவினர்களை ஆட்டோ ரிக்ஷாவில் ஏற்றிக்கொண்டு வேறு மருத்துவமனைக்கு செல்ல முயன்றதாகவும் தெரிவித்துள்ளார்.