திடீரென பேருந்தை சிறைப்பிடித்த மக்கள் - கோயம்பேட்டில் பரபரப்பு
சென்னை கோயம்பேட்டில் திடீரென பொதுமக்கள் பேருந்துகளை சிறைபிடித்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பேருந்துகள் இல்லை
வார விடுமுறை நாள் என்பதால் இன்று சென்னை கோயம்பேட்டில் வெளி ஊர் செல்வதற்காக நேற்று இரவு முதலே கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. ஆனால், வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளை விட குறைவான பேருந்துகளே இயக்கப்பட்டன என்பதால் பொதுமக்கள் கோபமடைந்ததுள்ளனர்.
பல மணி நேரம் காத்திருந்தும் முறையான பேருந்துகள் இல்லாத காரணத்தால், பொறுமை இழந்த பயணிகள், அப்போது கோயம்பேட்டில் இருந்து கிளமபிய மற்ற பேருந்துகளை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சமாதானப்படுத்திய போக்குவரத்து அதிகாரிகள்
இந்த போராட்டம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போக்குவரத்து துறை அதிகாரிகள், அவர்களை சமாதானப்படுத்தி, உரிய பேருந்து ஏற்பாடுகளை மேற்கொண்டனர். பொதுமக்களின் இந்த திடீர் போராட்டத்தால் சென்னை கோயம்பேட்டில் திடீரென பரபரப்பு ஏற்பட்டது.