இந்த நேரத்தில் ஆர்ஓ வாட்டர் பியூரிஃபையரை பயன்படுத்த வேண்டாம் - முக்கிய அறிவுரை!
காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை ஆர்ஓ வாட்டர் பியூரிஃபையரை பயன்படுத்த வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஆர்ஓ வாட்டர் பியூரிஃபையர்
பொதுமக்கள் பலரும் தங்களது வீடுகளில் ஆர்ஓ வாட்டர் பியூரிஃபையர் என்ற தண்ணீர் சுத்திகரிப்பு சாதனைத்தை பயன்படுத்தி வருகின்றனர். இந்த சாதனம் தற்போது வீடுகள் மட்டுமின்றி கடைகள், வணிக வளாகங்கள், கல்லூரிகள் உட்பட பல இடங்களில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை ஆர்ஓ வாட்டர் பியூரிஃபையரை பயன்படுத்த வேண்டாம் என தமிழ்நாடு வாட்டர் இன்டஸ்ட்ரீஸ் ரீடெய்லர்ஸ் அசோசியேஷன் தெரிவித்துள்ளது. அதாவது தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதாலும்,
அறிவுறுத்தல்
வரும் 4-ம் தேதி முதல் கத்திரி வெயில் தொடங்கவுள்ளதாலும் மேலே குறிப்பிட்டுள்ள இந்த நேரத்தில் ஆர்ஓ வாட்டர் பியூரிஃபையரை பயன்படுத்த வேண்டாம் என அந்த அமைப்பு அறிவுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக அந்த அமைப்பு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் "ஆர்ஓ வாட்டர் பியூரிஃபையர் பயன்படுத்தும் தமிழக மக்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள். உங்களது ஆர்ஓ வாட்டர் பியூரிஃபையரை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை பயன்படுத்த வேண்டாம் என கேட்டுக்கொள்கிறோம்.
தண்ணீரின் வெப்பநிலை அதிகமாக இருப்பதினால் மெயின் பில்டர் விரைவில் பழுதாகிவிடும். இதனால் குறிப்பிட்ட அந்த நேரத்தில் ஆர்ஓ வாட்டர் பியூரிஃபையரை பயன்படுத்த வேண்டாம்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.