பொது இடங்களில் நீராவி சிகிச்சையை பொது மக்கள் பயன்படுத்த வேண்டாம் - அமைச்சர் மா.சுப்ரமணியன்

Corona Tamil Nadu Inhaling Ma Subramaniam
By mohanelango May 17, 2021 07:57 AM GMT
Report

பொது இடங்களில் அமைக்கப்பட்டுள்ள நீராவி சிகிச்சையை பொதுமக்கள் யாரும் பயன்படுத்த வேண்டாம் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வேண்டுகோள்.

சென்னை லயோலா கல்லூரி வளாகத்தில் 100 படுக்கை வசதிகளுடன் புதிதாக அமைக்கப்பட்டுள்ள கொரோனா நோய் பரவல் தடுப்பு மையத்தை மருத்துவம் மற்றும் மக்கள் நல் வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் ஆய்வு மேற்கொண்டு தொடங்கி வைத்தார்

அப்போது அவருடன் நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி, ஆயிரம் விளக்கு சட்ட மன்ற உறுப்பினர் எழிலன் ஆகியோர் இருந்தனர்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த மக்கள் நல் வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்ரமணியன், “ஆக்சிஜன் வசதியுடன் கூடுதல் படுக்கை வசதிகளை ஏற்படுத்தி வருகிறது தமிழக அரசு. சென்னையில் தொற்று கடந்த 3 நாட்களாக குறைந்து வருவது மன நிறைவை அளிக்கிறது.

சென்னை முழுவதும் 11800 களப்பணியாளர்கள் கொரோனோ நோய் தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ஒரு மண்டலத்திற்கு 15 முதல் 18 மருத்துவர்கள் வீதம் ஒட்டுமொத்தமாக 250 முதல் 300 மருத்துவர்கள் வீடுகளில் தனிமைப்படுத்திக் கொண்ட நோயாளிகளுக்கு நேரடியாக சென்று ஆலோசனை வழங்கி வருகிறார்கள்.

இன்று லயோலா கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ளது போன்று மேலும் 22 இடங்களில் கொரோனோ பரவல் தடுப்பு மையங்கள் அமைக்கப்பட்டிருக்கிறது.

அதில் மொத்தம் 6982 படுக்கைகள் உள்ளதாகவும் அதில் 2,686 படுகைகளில் மட்டுமே நிரம்பி உள்ளது, மீதம் 4,296 படுக்கைகள் மக்கள் பயன்பாட்டிற்கு தயாராக உள்ளது.

பொது இடங்களில் அமைக்கப்பட்டுள்ள ஆவி பிடிப்பு சிகிச்சை முறையை பொதுமக்கள் யாரும் பயன்படுத்த வேண்டாம் எனவும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் கோரிக்கை விடுத்துள்ளார்.

அடுத்தவர் புகைபிடிப்பதை உடனடியாக நாமும் பிடிப்பதால் கொரோனோ நோய் பரவும் அபாயம் உள்ளதாக தெரிவித்துள்ளார் தடுப்பூசியைப் பொருத்தவரை 1.50 கோடி மத்திய அரசிடம் இருந்தும் மற்றும் 3 கோடி தடுப்பூசி நேரடியாக கொள்முதல் செய்யப்படும் எனவும் கூறியுள்ளார்