1,00,000 பேர் கொரோனா தடுப்பூசி இரண்டாவது டோஸ் போடவில்லையா? வெளியான அதிர்ச்சி தகவல்
இந்தியா முழுவதும் கடந்த ஜனவரி மாதம் முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. முதலில் மருத்துவர்கள் உள்ளிட்ட முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து மார்ச் 1 முதல் கொரோனா தடுப்பூசியானது பொதுமக்களுக்கும் போடப்படுகிறது.
இந்திய அரசால் அங்கீகரிக்கபட்ட கோவிட்ஷீல்ட் ,கோவேக்சின் தடுப்பு மருந்து தற்போது செலுத்தபட்டு வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா தடுப்பு முதல் டோஸ் போட்டுக்கொண்டவர்களில் 1 லட்சம் பேர் 2 வது டோஸ் செலுத்தவில்லை என்கிற தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது தமிழகத்தில் கடந்த 4 வாரத்துக்கு முன் 2.46 லட்சம் பேர் முதலாவது கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்டனர்.
இந்த 2.46 லட்சம் பேரில் 1.43 லட்சம் பேர் மட்டுமே 2 வது டோஸ் எடுத்துக்கொண்டனர், மீதம் உள்ள ஒரு லடசம் பேர் 2 வது டோஸ் தடுப்பூசி போடாமல் இருப்பது அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக கொரோனா தடுப்பூசியினை ஒருவர் 2 டோஸ் எடுத்துக்கொள்ள வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
கொரோனா தடுப்பூசியை எடுத்துக்கொள்ள மக்கள் தயக்கம் காட்டி வரும் நிலையில், தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்களே தயங்குவது அதிர்ச்சியளிக்கிறது.
தற்போது கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் தடுப்பூசியை அனைத்து வயதினருக்கும் வழங்க வேண்டும் என்றும் மக்களும் தயக்கமில்லாமல் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.