வானகரம் மீன் மார்க்கெட்டில் அலைமோதிய மக்கள் கூட்டம்

Corona Lockdown Chennai
By mohanelango May 23, 2021 08:23 AM GMT
Report

வானகரம் மீன் மார்க்கெட்டில் ம்க்கள் கூட்டம் அலைமோதியதால் கூட்டம் கூடுவதை தவிர்க்க வெளியில் வைத்து வியாபாரம் செய்த வியாபாரிகள்.

கொரோனா நோயின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் நாளை முதல் தளர்வில்லா முழு ஊரடங்கை தமிழக அரசு அறிவித்துள்ளது.

இந்த நிலையில் இன்றைய தினம் அனைத்து கடைகளும் இரவு 9 மணி வரை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் அனைத்து கடைகளிலும் கூட்டம் அலைமோத ஆரம்பித்தது.\

வானகரம் மீன் மார்க்கெட்டில் அலைமோதிய மக்கள் கூட்டம் | People Rushed To Vaanagaram Fish Market

குறிப்பாக வானகரத்தில் உள்ள மீன் மார்க்கெட்டில் கூட்டம் அலைமோதியது. மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்தும் விதமாக மார்க்கெட்டின் உள்பகுதியில் வியாபாரத்திற்கு அனுமதிக்காமல் வளாகத்தின் வெளிப் பகுதியில் சிறிய சிறிய பெட்டிகள் வைத்து அதன் மீது மீன்களை வைத்து வியாபாரிகள் வியாபாரம் செய்தனர்.

]பொதுமக்கள் அதிக அளவில் கூடியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தமிழகத்தில் மீன்பிடி தடைக்காலம் அமலில் இருப்பதால் மீன்களின் வரத்து குறைவாக உள்ளதே இதற்கு முக்கிய காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.