ஊரடங்கை இரண்டு மணி நேரம் குறைக்க வேண்டும் - உதகை மக்கள் கோரிக்கை
நாடு முழுவதும் கொரோனாவின் அச்சுறுத்தல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் கொரோனா தொற்றுலிருந்து பொதுமக்களை காப்பாற்ற தமிழக அரசு பல்வேறு நடவடிக்கையை எடுத்து வருகிறது.
மேலும் இன்று முதல் காலை 6மணி முதல் 12 மணி வரை மட்டுமே கட்டுபாடுகளுடன் கடைகள் செயல்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நீலகிரி மாவட்டம் உதகையிலும் காலை 6மணி முதல் 12 மணி வரை மட்டுமே அரசு அரசு அறிவித்திருந்த கடைகள், பலசரக்கு கடைகள், மார்க்கெட் கடைகள் உள்ளிட்டவைகள் அனைத்தும் மூட வேண்டும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்திருந்தது.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாண்டியராஜன் கமர்சியல் சாலை மற்றும் மார்கெட் பகுதிக்கு சென்று இதனை மக்களுக்கு தெளிவுபடுத்தவும், அனைவரும் முக கவசம் அணிய வேண்டும் என வலியுறுத்தவும் செய்தார். இதனிடையே மார்கெட் உள்ளிட்ட அனைத்து கடைகளும் 12 மணிக்கு மூடப்பட்டது.
ஆனால் மலை மாவட்டத்தில் உள்ள உதகை குளிர்பிரதேசம் என்பதால் பொதுமக்கள் காலை 10மணிக்கு மேல் தான் அத்தியாவசிய பொருட்கள் உள்ளிட்டவைகளை வாங்க வருவார்கள் எனவும் 10 மணியிலிருந்து 12 மணி வரை மட்டுமே கடை திறந்து வைப்பதால் குறைந்தளவே வியாபாரம் உள்ளதாக வியாபாரிகள் கவலையடைந்துள்ளனர்.
எனவே உதகைகக்கு மட்டும் கடைகளை காலை 6 மணிமுதல் பகல் 2 மணி வரை திறந்து வைக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்க வேண்டும் என வியாபாரிகள் மற்றும் பொது மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.