வேலைக்காகப் பதிவு செய்தவர்கள் இவ்வுளவு நபர்களா ? - தமிழ்நாடு அரசு வெளிட்ட அதிர்ச்சி தகவல்
தமிழகம் முழுவதும் 66 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வேலை வாய்ப்பிற்காக பதிவு செய்து காத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் வேலை வாய்ப்பு
தமிழகம் முழுவதும் படித்து விட்டு வேலை தேடுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதில் சிலர் கிடைத்த வேலையை செய்து வாழ்க்கையை நடத்துகின்றனர். மேலும், சிலர் வேலை வாய்ப்பு மையத்தில் தான் படித்த படிப்பிற்கான வேலை கிடைக்கும் வரை வேலை வாய்ப்பு மையத்தில் பதிவு செய்து வைத்து காத்திருக்கின்றனர்.
வெளியான பரபரப்பு தகவல்
அந்த வகையில் தற்பொழுது, தமிழ்நாடு அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் தமிழகம் முழுவதும் 66 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வேலை வாய்ப்பிற்காக பதிவு செய்து காத்திருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், பதிவு செய்து காத்திருப்பவர்களில் ஆண்கள் 31 லட்சமாகவும், பெண்கள் 35 லட்சமாகவும், திருநங்கைகள் 266 பேராகவும் உள்ளனர். அதிலும் பெரும்பாலானோர் 19 முதல் 30 வயதுடையவர்களாக உள்ளனர்.