“சோறு கூட போடுறோம், ஆனா ஓட்டு போட மாட்டோம்“ பாஜக தொண்டர் பேச்சு - மிரண்ட நயினார்
மக்கள் சோறு போட தயாராக இருப்பதாகவும், ஆனால் ஓட்டு போட மாட்டோம் என்று கூறுவதாக பாஜக தொண்டர் கூறியுள்ளார்.
பாஜக பூத் கமிட்டி
தமிழகம் முழுவதும் பாஜக பூத் கமிட்டி அமைத்து வருகிறது. அந்தவகையில், விருதுநகர் ரோசல்பட்டி சாலையில் உள்ள அண்ணா சிலை அருகே,
அக்கட்சியின் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் பூத் கமிட்டி ஆய்வுக்கு சென்றார். அப்போது, அங்கு வந்திருந்த பாஜக தொண்டர் ஒருவர்,
நயினார் அதிர்ச்சி
“நீங்கள் தேர்தலில் நில்லுங்கள், உங்களுக்கு சாப்பாடு கூட போடுறோம், ஆனா ஓட்டுப் போட மாட்டோம் என எல்லாரும் சொல்றாங்க“ என்று நயினார் நாகேந்திரனிடம் தெரிவித்தார்.
இதனை சற்றும் எதிர்பார்க்காத நயினார் நாகேந்திரன் பெரும் அதிர்ச்சியடைந்தார். அப்போது குறுக்கிட்ட பாஜக நிர்வாகிகள், அதை பிறகு பேசிக் கொள்ளலாம் எனக் கூறி சமாளித்து அவரை திருப்பி அனுப்பினர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.