தொடரும் பொருளாதார நெருக்கடி , முடிவுக்கு வராத போராட்டம் : இலங்கையில் அதிபர் அலுவலகத்தை முற்றுகையிட்ட மக்கள்

srilanka SriLankaProtests SriLankanCrisis
By Irumporai Apr 15, 2022 04:13 AM GMT
Report

இலங்கையில் தற்போது கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதால், அங்கு உள்ள குடிமக்கள் அரசுக்கு எதிராக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் அதிபர்கோத்தபய ராஜபக்சேவின் அலுவலகத்திற்கு முன்பு ஒன்று கூடிய பொதுமக்கள், கோ கோத்தபய கோ என்ற கோஷங்களை எழுப்பினர். இது குறித்து போராட்டக்காரர்கள் கூறும் போது மக்கள் தற்போது கடும் துன்பத்தில் உள்ளனர்.

ஆகவே சிங்களர்கள், தமிழர்கள்,முஸ்லிம்கள் என ஒட்டுமொத்தமாக அரசுக்கு எதிராக ஒரே உணர்வுடன் எங்கள் எதிர்பை தெரிவித்துவருகிறோம்.

இலங்கையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு 100 ரூபாய்க்கு விற்கப்படும் பொருட்கள் இப்போது 400 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. தற்போது யாரிடமும் பணம் கிடையாது பணத்தை அரசு என்ன செய்தது? நாடு ஏன் திவாலானது? என்றும்  கேள்வி எழுப்பியுள்ளனர்.

இந்த நிலையில், அத்தியாவசியத் தேவைகளான உணவு, மருந்துப்பொருட்கள் மற்றும் எரிபொருள் வாங்க வெளிநாட்டில் வாழும் இலங்கை மக்கள் தங்களின் வீடுகளுக்கு பணம் அனுப்ப வேண்டும் என இலங்கை அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது குறிபிடத்தக்கது.