கோவிலை அபகரிக்க வடிவேலு முயற்சி? எதிர்ப்பு தெரிவித்த பொதுமக்கள்
கோவிலை அபகரிக்க முயன்றதாக நடிகர் வடிவேலு மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
வடிவேலு
தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வந்தவர் வடிவேலு. சில காலங்களில் படங்களில் நடிப்பதில் இருந்து விலகி இருந்த இவர் தற்போது மீண்டும் மாரீசன், கேங்கர்ஸ் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள காட்டுப் பரமக்குடியில் திருவேட்டை உடைய அய்யனார் கோவில் உள்ளது. இது நடிகர் வடிவேலுவின் குலதெய்வ கோவில் ஆகும்.
கோவிலை கைப்பற்ற முயற்சி
இந்த கோயிலை வடிவேலுவின் தூண்டுதலின் பெயரில், கோயில் அறங்காவலர் பாக்யராஜ் என்பவர் ஆக்கிரமிப்பு செய்து வடிவேலுக்கு சொந்தமான கோயிலாக மாற்றம் செய்ய முயற்சி செய்து வருதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதனை கேள்வி பட்ட ஊர் பொதுமக்கள் கோவிலுக்கு முன் திரண்டு வடிவேலுக்கு எதிராக கோஷமிட்டு ஆர்பாட்டம் செய்தனர். அதன்பின்னர் கோயிலுக்கு புதிதாக தலைவர், செயலாளர், பொருளாளர் என பொறுப்புகள் உருவாக்கப்பட்டு கிராம மக்களால் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கோவில் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது, இது தொடர்பான பேச்சுவார்த்தை பரமக்குடி நகர் காவல் நிலையத்தில் நடக்க உள்ள நிலையில், தேவையின்றி கோவிலை ஆக்கிரமிக்க கைப்பற்ற முயற்சி செய்வதாக கூறி போராட்டம் நடத்துகின்றனர் என மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாக்யராஜ் புகார் அளித்துள்ளார்.