ஒரு வருடமாக குடிநீர் வசதி இல்லை - வீதியில் இறங்கி போராடிய பொதுமக்கள்
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகே வெலக்கல்நத்தம் ஊராட்சிக்கு உட்ப்பட்ட கிட்டப்பைபயனூர், நத்திபெண்டா, லட்சுமிபுரம் போன்ற பகுதிகளில் கடந்த ஒரு ஆண்டுகாலமாக முறையான குடிநீர் விநியோகம் கிடைக்கவில்லை.
பலமுறை ஊராட்சி அலுவலகத்தில் தகவல் கொடுத்தும் இதுவரையில் எந்த விதமான நடவடிக்கைகள் எடுக்காததால் அப்பகுதி பெண்கள், மற்றும் பொதுமக்கள் 100க்கும் மேற்பட்டவர்கள் காலிகுடங்களுடன் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு தமிழக அரசு வகுத்து உள்ள கொரோனா விதிகளை கடைபிடிக்கும் வகையில் போதிய முக கவசம் மற்றும் சமூக இடைவெளியில் அமர்ந்து கண்டன கோஷங்களை எழுப்பி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் தகவல் அறிந்து வந்த நாட்றம்பள்ளி வட்டார வளர்ச்சி துணை அலுவலர் சத்தியா முறையான தண்ணிர் வழங்குவதாக கூறியதால் அனைவரும் கலைந்து சென்றனர்.