விஜய் சைக்கிளில் வந்ததை சிலர் அரசியலாக்க முயற்சிக்கிறார்கள்- குஷ்பு ஆவேசம்
நடிகர் விஜய் சைக்கிளில் வந்து வாக்களித்தது குறித்து பாஜக வேட்பாளரும், நடிகையுமான குஷ்பு கருத்தை தெரிவித்திருக்கிறார். தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் இன்று காலை 7 மணியிலிருந்து தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதனையடுத்து தமிழக மக்கள் அனைவரும் மிகவும் ஆர்வத்துடன் தங்களது வாக்குகளை பதிவு செய்து வருகிறார்கள்.
அரசியல் தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள், சினிமா நட்சத்திரங்கள் அனைவரும் வாக்களித்து வருகின்றனர். இன்று காலை நடிகர் விஜய் சைக்கிளில் வாக்குச்சாவடிக்கு வந்து தனது வாக்கை பதிவு செய்தார்.
நடிகர் விஜய் ஏன் சைக்கிளில் வர வேண்டும். மறைமுகமாக பெட்ரோல், டீசல் விலையை சுட்டிக்காட்டுவதற்காக இப்படி சைக்கிளிலில் வந்தாரா என்று பலர் சமூகவலைத்தளங்களில் தங்களது கருத்தை தெரிவித்து வருகிறார்கள்.

இந்நிலையில் சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த நடிகை குஷ்பு, விஜய் சைக்கிளில் வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களித்தார். அதை சிலர் அரசியல் ஆக்க முயற்சி செய்து வருகிறார்கள். வாக்குச்சாவடி மையத்தில் அருகில் விஜய் வீடு உள்ளது. அதனால் அவர் சைக்கிளில் வந்திருப்பார். திமுகவைச் சேர்ந்தவர்கள் வாக்காளர்களுக்கு பணத்தை விநியோகம் செய்ததை கண்டோம்.
இது குறித்து நாங்கள் தேர்தல் ஆணையத்தில் புகாரும் அளித்திருக்கிறோம். தேர்தல் ஆணையம் தக்க நடவடிக்கை எடுக்கும் என்று நாங்கள் நம்புகிறேன் என்றார்.