அரசியல் பொது கூட்டத்திற்கு இவ்வுளவு கூட்டம் வருமா! பிரியாணிக்காக அலைமோதிய கூட்டம்
உலக பெண்கள் தினத்தையொட்டி தனியார் உணவகம் ஒன்று பெண்களுக்கு 1 ரூபாய்க்கு சிக்கன் பிரியாணி வழங்கி அசத்தியிருக்கிறது. மார்ச் 8ம் தேதியான இன்று சர்வதேச பெண்கள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையடுத்து, பெண்களை கவுரவிக்கும் வகையில் கல்லூரிகள் மற்றும் தனியார் நிறுவனங்களில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக திண்டுக்கல் கரூர் சாலையில் உள்ள தனியார் உணவகம் ஒன்று பெண்கள் தினத்தையொட்டி 1 ரூபாய்க்கு சிக்கன் பிரியாணி விற்பனை செய்யப்படுவதாக அறிவித்தது.
இந்த சலுகை விலையில் சிக்கன் பிரியாணியை நீண்ட வரிசையில் காத்திருந்து சிறு வயது பெண்கள், நடுத்தர வயது பெண்கள் என தாங்கள் கொண்டு வந்த 1 ரூபாய்யை கொடுத்து சிக்கன் பிரியாணியை வாங்கி சென்றனர். இதனால் அந்த கடையில் பெண்கள் கூட்டம் அலைமோதியது.