உலகில் மக்கள் குடியேற விரும்பும் நகரத்தில் துபாய்க்கு முதலிடம் - ஆய்வில் தகவல்

People Dubai Top Country Like
By Thahir Dec 20, 2021 12:57 AM GMT
Report

உலகில் பொதுமக்கள் தங்களது இருப்பிடங்களை மாற்றியமைத்துக் கொள்ள விரும்பும் நகரங்களில் துபாய் நகரம் முதலிடத்தில் உள்ளது என இங்கிலாந்து ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகில் பொதுமக்கள் தங்களது இருப்பிடங்களை மாற்றியமைத்துக் கொள்ள விரும்பும் நகரங்களில் துபாய் நகரம் முதலிடத்தில் உள்ளது.

மஸ்கட் 5-வது இடத்தை வகிக்கிறது என இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளதாவது:- உலகில் பொதுமக்கள் தங்களது இருப்பிடங்களை மாற்றிக் கொள்ள விரும்பினால் எந்த நகரங்களை தேர்வு செய்வார்கள்? என்பது குறித்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இந்த ஆய்வானது வெப்பநிலை, மழைப்பொழிவு உள்ளிட்ட பல்வேறு காரணிகளை வைத்து நடத்தப்பட்டது. இந்த ஆய்வின் அடிப்படையில் உலகிலேயே துபாய் நகரம் பொதுமக்கள் தாங்கள் குடியேற விரும்பும் முதல் நகரமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இதற்கு முக்கிய காரணம் துபாய் நகரின் சராசரி வெப்பநிலை 28.2 டிகிரி செல்சியசில் இருந்து வருவதே ஆகும். இதேபோல் வருடத்தின் மழையளவு 68 மி.மீ ஆகும்.

இதனைத் தொடர்ந்து 2-வது இடமாக அமீரகத்தின் தலைநகர் அபுதாபி இருந்து வருகிறது. இங்கு சராசரி வெப்பநிலை 27.9 டிகிரி செல்சியஸ் ஆகவும், ஆண்டின் சராசரி மழையளவு 42 மி.மீ ஆகவும் இருக்கிறது.

ஓமன் நாட்டின் தலைநகர் மஸ்கட் நகரமானது உலகில் 5-வது இடத்தை வகிக்கிறது. இந்த நகரின் சராசரி வெப்பநிலை 27.30 டிகிரி செல்சியஸ் ஆகவும், வருட மழையளவு 100 மி.மீ ஆகவும் உள்ளது.

மேலும் 3-வது இடத்தை பஹ்ரைன் நாட்டின் மனாமா நகர் பெற்றுள்ளது. வளைகுடா பகுதியில் உள்ள நகரங்களே பொதுமக்கள் தங்களது இருப்பிடங்களை மாற்றிக் கொள்ள விரும்பும் நகராக உள்ளது குறிப்பிடத்தக்கது.