மக்களே நீதிபதி.. அவர்களது தீர்ப்பே இறுதியானது- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
மக்களது தீர்ப்பே இறுதியானது அவர்கள் இந்த தேர்தலில் சரியான முடிவை எடுப்பார்கள் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் தெரிவித்துள்ளார். வேட்பாளர் பட்டியல் தொடர்பான அதிருப்தி என்பது எல்லா கட்சிகளிலும் உள்ளது தான். கூட்டணியில் ஒரே தொகுதியை எல்லா கட்சிகளும் கேட்கும்போது பேசித்தான் தீர்க்க வேண்டும்.
கூட்டணியில் உடன்பாடு ஏற்படவில்லை எனில் பழி சுமத்துவது தவறு எனவும் தெரிவித்தார். ஒவ்வொரு கட்சிக்கும் உள்ள வாக்கு வங்கிக்கு ஏற்றவாறுதான் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படும். மக்களுக்கு தேவையானதை தேர்தல் அறிவிப்பு முன்னரே நடைமுறைப்படுத்திய கட்சி அதிமுக.
மேலும் தொகுதி பங்கீட்டில் உடன்பாடு ஏற்படாததை அடுத்து தேமுதிக பக்குவம் இல்லாத கட்சியை போல நடந்து கொள்கின்றனர்.
மேலும் இந்த தேர்தலில் மக்கள் சரியான முடிவையே எடுப்பார்கள் எனவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.