கொரோனா பரிசோதனைக்கு பயந்து காட்டுக்குள் ஒளிந்து கொண்ட கிராம மக்கள்
கொரோனா பரிசோதனைக்கு பயந்து காட்டுக்குள் ஒளிந்து கொண்ட கிராம மக்கள்.
உத்தரகாண்ட் மாநிலத்தில் கொரோனா பரிசோதனைக்கு பயந்து ஒரு கிராமமே அருகில் உள்ள காட்டுக்குள் ஓடி ஒளிந்து கொண்டுள்ளனர்.
உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள குடா சௌராணி கிராமத்தில் வசிக்கும் பழங்குடியின மக்களுக்கு அருகில் உள்ள Aultari மற்றும் Jamtari ஆகிய கிராமங்களில் அதிகாரிகள் கொரோனா பரிசோதனை மேற்கொண்ட தகவல் தெரியவந்தது.
இதனையடுத்து அங்குள்ள கிராம மக்கள், தங்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொண்டால், கொரோனா இருப்பதாக வந்துவிடும் என்ற அச்சத்தில் பெரும்பாலானோர் அருகில் உள்ள காட்டு பகுதிக்குள் ஓடி ஒளிந்து கொண்டனர்.
இதனையடுத்து, அங்கு சென்று அதிகாரிகள், பழங்குடியின மக்களில் படித்தவர்களிடம் பரிசோதனை குறித்து விவரிக்க முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.