புத்தாண்டு கொண்டாட்டம்; புதுச்சேரி கடற்கரை சாலையில் குவிந்த மக்கள்
Puducherry
By Thahir
புதுச்சேரியில் புத்தாண்டை வரவேற்பதற்காக கடற்கரை சாலையில் நுாற்றுக்கணக்கான மக்கள் குவிந்துள்ளனர்.
புதுச்சேரியில் குவிந்த மக்கள்
உலக நாடுகளில் புத்தாண்டு பிறந்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக கிரிபாட்டி நாட்ல் முதலாவது நாளாக பிறந்தது.
அதை தொடர்ந்து இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், தாய்லாந்து, ஹாங்காங் நாடுகளில் பிறந்தது. இந்த நிலையில் இந்தியாவில் 2022 ஆம் ஆண்டு விடைபெற இன்னும் 1 மணி நேரங்களே உள்ள நிலையில்,

இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் புத்தாண்டை வரவேற்க பொது இடங்களில் திரண்டு வருகின்றனர்.
முக்கிய சுற்றுலா தலமான புதுச்சேரியில் புத்தாண்டை வரவேற்க கடற்கரை சாலையில் நுாற்றுக்கணக்கான மக்கள் குவிந்து வருகின்றனர்.