ஆக்சிஜன் இருந்தும் பரிதாபமாக பலியான நான்கு பேர் - கர்நாடகாவில் துயர சம்பவம்
கோலார் மாவட்டத்தில் ஆக்சிஜன் இருந்தும் முறையாக நோயாளிகளுக்கு அளிக்காததால் 4 பேர் மூச்சு தினறி பலியான சம்பவத்தில் 3 பேர் பணி இடை நீக்கம்.
கர்நாடக மாநிலம் கோலார் மாவட்ட அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் கிடைக்காததால் மூச்சுத்திணறி 4 நோயாளிகள் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக 3 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். கர்நாடக மாநிலத்தில் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
நேற்று ஒரே நாளில் கொரோனா தொற்றால் 31 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதனால் மாநிலம் முழுவதும் படுக்கை வசதி கிடைக்காமலும் ஆக்சிஜன் தட்டுபாடு காரணமாகவும் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
கோலார் மாவட்டத்தில் அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது இங்கு உள்ள அவசர சிகிச்சை பிரிவில் 20 நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த 25ம் தேதி மருத்துவ மணையில் ஆக்சிஜன் இருந்தும் முறையாக நோயாளிகளுக்கு அளிக்காததால் சிகிச்சையில் இருந்த 4 பேர் மூச்சு தினறி உயிரிழந்தனர்.
மருத்துவமனை ஊழியர்கள் அலட்சியமாக செயல்பட்டதே உயிரிழப்புக்கு காரணம் என உயிரிழந்தவர்களின் உறவினர்கள் குற்றச்சாட்டு தெரிவித்து உள்ளனர்.
இதனையடுத்து மூச்சு திணறல் ஏற்பட்டு 4 பேர் பலியான சம்பவம் தொடர்பாக ஆக்சிஜன் இணைப்பு பிரிவு அதிகாரி உட்பட 3 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதுடன் இந்த சம்பவம் தொடர்பாக உரிய விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.
ஜம்மு-காஷ்மீரில் பயங்கரம் :200 அடி பள்ளத்தாக்கில் விழுந்த இராணுவ வாகனம்: பத்து வீரர்கள் உயிரிழப்பு IBC Tamil