இந்தியாவில் கொரோனாவால் 50,000 பேர் இறப்பார்களா? போலி செய்திக்கு WHO விளக்கம்

who covid19 india people dead
By Jon Apr 07, 2021 09:52 AM GMT
Report

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் கடந்த மார்ச் மாதத்திலிருந்து தீவிரமாகப் அதிகரித்து வருகிறது. கொரோனாவின் இரண்டாம் அலை உச்சகட்டத்தை எட்டி நேற்று முன்தினம் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டனர். கொரோனாவால் ஏற்படுகிற மரணங்களும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.

இந்நிலையில் உலக சுகாதார அமைப்பு வெளியிட்டதாக ஒரு தகவல் சமூக வலைதளங்களில் வெளியானது. அதில், 'ஏப்ரல் 15-ம் தேதிக்குள் இந்தியாவில் கொரோனா மூலம் 50 ஆயிரம் பேர் உயிரிழப்பார்கள் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது' எனத் தகவல் வெளியானது.  

இந்தச் செய்தி குறித்து, உலக சுகாதார அமைப்பு ட்விட்டரில் விளக்கம் அளித்துள்ளது. அதில் 'ஏப்ரல் 15-ம் தேதிக்குள் இந்தியாவில் கரோனாவில் 50 ஆயிரம் பேர் உயிரிழப்பார்கள் என்ற செய்தி பொய்யானது. இதுபோன்ற எந்த எச்சரிக்கையயும் நாங்கள் வெளியிடவில்லை' என விளக்கம் அளித்துள்ளது.