பிணத்துடன் ஆட்டம் போடும் மக்கள் - மர்மம் விலகாத வரலாறு..ஏன் அப்படி செய்கிறார்கள்?
உயிரிழந்தவரின் உடலை வைத்து துக்கம் கொள்ளாமல் உடலை துாக்கி கொண்டு நடனமாடும் விசித்திரமான நிகழ்வு குறித்த தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
குடும்பத்தினர் உயிரிழந்தால் துக்கம் கொள்ளும் நிகழ்வு
குடும்பத்தில் யாராவது இறந்துவிட்டால் நம் உள்ளங்களும், கண்களும் கண்ணீர் சிந்த தொடங்கிவிடும்.ஒட்டுமொத்த குடும்பமும் சோகத்தில் முழ்கிவிடும்.
இதே போன்று தான் பல்வேறு நாடுகளில் இறந்தவர்களுக்கு துக்கம் அனுசரித்து வருகின்றனர். ஆனால் இந்த நாட்டில் மட்டும் வினோதமாக இறந்தவரின் உடலை துாக்கி பிடித்துக் கொண்டு நடனம் ஆடுகின்றனர்.
ஏன் அவ்வாறு செய்கிறார்கள் என்பதை சற்று விரிவாக பார்க்கலாம். மடகாஸ்கர் நாட்டில் தான் இதை பாரம்பரிய வழக்கமாக கடைப்பிடித்து வருகின்றனர்.
இறந்தவரின் உடலை வைத்து நடனமாடும் உறவினர்கள்
இங்கு யாராவது இறந்தால் மக்கள் துக்கம் கொள்வதில்லையாம். தங்கள் குடும்ப உறுப்பினர்களின் இறப்பிற்கு பிறகு வினோதமான வழக்கத்தை கடைப்பிடித்து வருகின்றனர்.
இந்த பாரம்பரிய வழக்கத்தை ஃபமதிஹானா அதாவது எழும்புக்கூட்டை திருப்புதல் என சொல்கிறார்கள். இறந்தவர்களின் உடல் எவ்வளவு சீக்கிரம் எலும்பு கூடாக மாறுகிறதோ, அவ்வளவு சீக்கிரம் விடுதலை அடைகிறார்கள் என மக்களிடையே நம்பிக்கை இருந்து வருகிறது.
இப்படி நடந்தால் அவர்கள் மரணத்திற்கு பிறகு தங்களுடைய புதிய வாழ்வில் நுழைவார்கள் என அந்நாட்டு மக்கள் நம்புகின்றனர்.
இவர்கள் இறந்த உடல்களை வைத்து நடனமாடுவதோடு மட்டுமல்லாமல் சில அதிர்ச்சியூட்டும் தகவல்களை தெரிவிக்கின்றனர் அப்பகுதி மக்கள்.
இறந்த உடல் சதையோடு உள்ள வரை ஆன்மா வேறு உடலுக்குள் செல்ல முடியாமல் தவிக்குமாம். அதனால் மக்கள் தங்களின் ப்ரியமானவர்களின் சடலத்தை கல்லறையிலிருந்து வெளியே எடுத்து அவர்களோடு நடனமாகிறார்கள்.
உயிரிழந்தவர்களின் உடலுடன் பாட்டு பாடி நடனமாடி சடலத்தை புதைக்கிறார்கள். இந்த பாரம்பரியத்தை உயிரிழந்த இரண்டாவது ஆண்டு அல்லது 7ம் ஆண்டில் செய்கின்றனர்.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.