நாளை முதல் தளர்வுகள் இல்லா முழு ஊரடங்கு... அம்பத்தூரில் அலைமோதும் மக்கள் கூட்டம்...
தமிழகத்தில் நாளை முதல் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் நிலையில், அம்பத்தூரில் உள்ள கடை வீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.
தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா தொற்றின் காரணமாக நாளை முதல் ஒரு வார காலத்திற்கு தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமல் படுத்தப் படுவதாக தமிழக அரசு நேற்று அறிவித்தது.
மேலும் பொதுமக்கள் ஒரு வார காலத்திற்கு தேவையான பொருள்களை வாங்கி இருப்பு வைத்துக் கொள்ளும் வகையில் நேற்றும் இன்றும் அனைத்து கடைகளையும் திறக்க உத்தரவிட்டது.

இதன் காரணமாக தமிழகம் முழுவதும் உள்ள கடை வீதிகளில் மக்கள் கூட்டம் அலை மோதுகிறது. காய்கறி கடைகள், மளிகை கடைகளில் மக்கள் கூட்டம் கூட்டமாக நின்று பொருட்களை வாங்கிச் செல்கின்றனர்.
அந்த வகையில் அம்பத்தூரில் உள்ள மீன் மார்க்கெட்டில் மீன் வாங்க பொதுமக்களின் கூட்டம் அலைமோதியது. சமூக இடைவெளி இல்லாமல் பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக நின்று மீன் வாங்கி செல்கின்றனர். இதனால் நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.