நாளை முதல் தளர்வுகள் அற்ற ஊரடங்கு... காசிமேட்டில் குவியும் மீன் பிரியர்கள்
தமிழகத்தில் இன்று முழு ஊரடங்கு ரத்து செய்யப்பட்டாலும் நிலையில் காசிமேட்டில் குவியும் பொதுமக்களால் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில்வேகமாக பரவி வரும் கொரோனா பரவல் காரணமாக நாளை முதல் ஒரு வாரம் தளர்வுகள் அற்ற ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் இன்று அறிவிக்கப்பட்ட ஞாயிறு முழு ஊரடங்கு ரத்து செய்யப்பட்டு பொதுமக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி வைத்துக்கொள்ளலாம் என தமிழக அரசு அறிவுறுத்தி உள்ளது.
ஞாயிற்றுக்கிழமை உட்பட விடுமுறை நாட்களில் காசிமேடு பகுதியில் திருவிழா கோலம் பூண்டு அதிகாலை முதலே மீன்களை வாங்க அசைவ பிரியர்கள் குவிய தொடங்குது வழக்கம். ஊரடங்கால் இப்பகுதி வெறிச்சோடி வந்தநிலையில், விற்பனை இல்லாமல் இப்பகுதியில் உள்ள கடைகள் அடைக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று முழு ஊரடங்கு ரத்து செய்யப்பட்டதால் அதிகாலை முதலே பழைய மீன்பிடி ஏலக்கூடம் அருகே புதியதாக அமைக்கப்பட்ட மீன் விற்பனை தளத்தில் மீன்கள் விற்பனை நடைபெற்று வருகிறது. தடுப்பு கட்டைகள் அமைத்து வியாபாரிகள் மீன்களை ஏலம் விடும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். சிறு வியாபாரிகள், பொதுமக்கள் என அனைவரும் சமூக இடைவெளியை கடைபிடித்து மீன் வாங்க ஏதுவாக போலீசார் தனித்தனியாக மீன் விற்பனை கடைகளை அமைத்துக் கொடுத்தும் ஒலிபெருக்கிகள் மூலம் சமூக இடைவெளியை கடைபிடிக்கவும் முகக் கவசங்கள் அணியவும் அறிவுறுத்தி வருகிறார்கள்.
மீன்பிடி தடைக்காலம் அமலில் உள்ளதால் பெரிய வகை மீன்கள் வரத்து இல்லாமல் சிறிய மீன்கள் மட்டுமே விற்பனையில் உள்ளது. ஒரு சில இடத்தில் மட்டும் பெரிய வகை மீன்களை விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில் பொதுமக்களும் ஆர்வமுடன் மீன்களை வாங்கி செல்கின்றனர்.
அதேசமயம் ஒரே இடத்தில் மீன்களை வாங்குவதற்கு பொதுமக்களும் வியாபாரிகளும் குவிந்ததால் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.