மிலிட்டரி கேன்டீனில் குவிந்த கூட்டம் - எதுக்கு தெரியுமா?
Cuddalore
Military canteen
By Petchi Avudaiappan
கடலூரில் உள்ள மிலிட்டரி கேன்டீனில் பொதுமக்கள் ஏராளமானோர் குவிந்ததால் காவல்துறையினர் கூட்டத்தை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
கடலூர் மாவட்டம் புதுப்பாளையத்தில் உள்ள மிலிட்டரி கேன்டீன் இன்று திறக்கப்பட்டது. அங்கு ஒரே நேரத்தில் ஏராளாமானோர் மது வாங்குவதற்காக குவிந்தனர்.
தகவலறிந்து வந்த காவல்துறையினர் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கடைப்பிடித்தால் மட்டுமே, மதுபாட்டில்களை விற்பனை செய்ய அனுமதிக்கப்படும் என எச்சரித்தனர்.
மேலும் கூட்டத்தை கட்டுப்படுத்தும் பணியிலும் போலீசார் ஈடுபட்டனர்.
ஊரடங்கிற்கு பிறகு இன்றுதான் மிலிட்டரி கேன்டீன் மது விற்பனை தொடங்கப்பட்டதால் இந்த அளவு கூட்டம் கூடியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

எந்த விடயத்திலும் perfection பார்க்கும் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan

யாழில் பெரும் சோகத்தை ஏற்படுத்திய உதவி பிரதேச செயலாளரின் மரணம்...! மீண்டும் ஆரம்பமாகும் விசாரணை IBC Tamil
