மக்கள் வீட்டைவிட்டு வெளியே வர வேண்டாம் - கர்நாடக முதல்வர் வேண்டுகோள்

people home cm stay request
By Praveen Apr 22, 2021 12:04 PM GMT
Report

மக்கள் தங்கள் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் உங்களை கைகூப்பிக் கேட்டுக் கொள்கிறேன் என கர்நாடக முதல்வர் தெரிவித்துள்ளார்.

உலகம் முழுவதும் கொரோனா இரண்டாவது அலை பரவிவருகிறது. இந்தியாவிலும் இந்தத் தொற்று வேகமாகப் பரவிவருகிறது. இதைக்குறைக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. இந்நிலையில் கொரொனா பரவலைக் கடுப்படுத்த மக்கள் கூடும் பொது இடங்களில் அரசு பதுகாப்பு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.

தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் கொரொனா பரவல் தீவிரம் அடைந்துள்ளதால் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், கர்நாடக மாநில முதல்வர் நிலைமை கையை மீறிச் சென்றுவிட்டதாகக் கவலை தெரிவித்துள்ளார்.

நாள்தோறும் கர்நாடகாவில் சில ஆயிரம் மக்கள் கொரொனாவால் பாதிக்கப்படுவதாலும் கொரொனாவால் பாதிக்கப்பட்டவர்களில் குறிப்பிட்ட வயதினருக்கு மேல் சிலிண்டர் தட்டுப்பாடு நிலவுவதாலும் மக்களைக் காக்க வேண்டிய பொறுப்பு மாநில அரசுக்கு அதிகரித்துள்ளது.

இந்நிலையில், அம்மாநில முதல்வர் எடியூரப்பா இதுகுறித்து கூறியுள்ளதாவது,

கர்நாடக மாநிலத்தில் கொரோனா தொற்று மோசமாக உள்ளாது. நிலைமை கை மீறிச் சென்றுள்ளதால் பொதுமக்கள் தங்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.