அமைச்சருக்கு நேரில் பாலபிஷேகம் செய்த மக்கள், மகிழ்ச்சியில் நடனம் - வைரலாகும் புகைப்படம்!

Telangana Viral Photos
By Vinothini Jun 14, 2023 07:20 AM GMT
Report

தெலுங்கானாவில் அமைச்சரை பாராட்டி மக்கள் பாலபிஷேகம் செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமைச்சர்

தெலுங்கானா மாநிலத்தின் தொழிலாளர் நல அமைச்சர் மல்லா ரெட்டி. இவர் நேற்று பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக மகபூப்நகருக்கு சென்றார். இவர் மகபூப் நகரில் உள்ள பி.கே ரெட்டி காலனியில் அமைச்சர்களை வரவேற்க பொதுமக்கள் பல்வேறு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

people-celebrates-telanagana-minister

அப்பகுதியில் அமைச்சர்கள் வந்து இறங்கியதும் அவர்களுக்கு ஆரத்தி எடுத்து அழைத்துச் சென்றனர். பின்னர் அவர்களை ஒரு நாற்காலியில் அமர வைத்து பொதுமக்கள் வரிசையாக வந்து பாலாபிஷேகம் செய்தனர்.

நடனம்

இதனை தொடர்ந்து, அந்த அமைச்சருக்கு மக்கள் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், அமைச்சர் தங்கள் பகுதிகளில் பல்வேறு நல்ல பிணிகளை செய்துள்ளார்.

people-celebrates-telanagana-minister

இதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் பாலபிஷேகம் செய்ததாக கூறியுள்ளனர். பிறகு அங்கு விருது வழங்கும் விழா நடந்தது, அதில் அமைச்சர் சினிமா பாடலுக்கு நடனம் ஆடி மகிழும் வீடியோ மற்றும் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் பரவி வருகிறது.