ஒரே நாடு ஒரே தேர்தல் - Workout ஆகுமா..? பொதுமக்களும் கருத்து தெரிவிக்கலாம்..!

India Election
By Karthick Jan 05, 2024 06:05 AM GMT
Report

மத்திய பாஜக அரசு ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை குறித்தான பணிகளில் தொடர்ந்து தீவிரம் காட்டி வருகின்றது.

ஒரே நாடு ஒரே தேர்தல்

நாட்டில் மொத்தமுள்ள 32 மாநிலங்களுக்கும், நாடாளுமன்றத்திற்கு சேர்த்து ஒரே கட்டமாக தேர்தல் நடத்தும் முன்னெடுப்பாக ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை மத்திய பாஜக அரசு முன்னெடுத்துள்ளது.

people-can-send-thoughts-on-1-nation-1-election

ஆனால், இம்மாதிரியான தேர்தல்கள் இந்தியாவிற்கு புதிதொன்றுமில்லை. சுதந்திர இந்தியாவில் கடந்த 1967-ஆம் ஆண்டு நாடாளுமன்றம் மற்றும் அனைத்து சட்டமன்ற தேர்தல்களும் ஒன்றாகவே தேர்தல் நடத்தப்பட்டுள்ளது. ஆனால், அதனை தொடர்ந்து நடந்த அரசியல் நகர்வுகளால், அவ்வகையான தேர்தல் கைவிடப்பட்டுள்ளது. 

பயன் என்ன..?

இப்படியாக ஒரே நாடு ஒரே தேர்தல் இந்தியாவில் வந்தால், தேர்தலுக்காக செலவு செய்யப்படும் தொகை கணிசமாக குறையும் என கூறப்படுகிறது. கடந்த 2019-ஆம் ஆண்டின் மத்திய பொது தேர்தலுக்கு மட்டும் கிட்டத்தட்ட ரூ.60,000 கோடி செலவு செய்யப்பட்டதாக புள்ளி விவரங்கள் உள்ளன.

people-can-send-thoughts-on-1-nation-1-election

அதே போல கடந்த 2021-ஆம் ஆண்டிற்கான சட்டமன்ற தேர்தலுக்கு மட்டுமே தமிழக தற்போதைய ஆளும் திமுக அரசு 114 கோடி ரூபாய் செலவு செய்துள்ளதாக "The Times of India" கட்டுரை வெளியிட்டுள்ளது. ஆக இம்மாதிரியான தேர்தல்களால் பெரும்பாலும் குறையும் என கணிக்கப்படுகிறது.

கருத்து கேட்பு

இந்நிலையில், தான் மத்திய அரசு அண்மையில் முன்னாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் குழு ஒன்றை அமைத்து இந்த "ஒரே நாடு ஒரே தேர்தல்" முறையை அமல்படுத்தமுடியுமா..? என்ற ஆய்வில் இறங்கியுள்ளது.

people-can-send-thoughts-on-1-nation-1-election

இந்த ஆய்வில் தற்போது பொதுமக்களும் தங்களது கருத்தை தெரிவிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது. வரும் ஜனவரி 15-ஆம் தேதி வரை தங்களது கருத்தை மெயில் மூலம் அனுப்பலாம் என்றும் பரிந்துரைகளை https://onoe.gov.in அல்லது sc-hic@ gov.in என்ற மின்னஞ்சலில் அனுப்பலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.