‘’ போராட்டத்திற்கு அழைப்பு விடுத்த மக்கள் '' : ஊரடங்கினை அறிவித்த இலங்கை அரசு

lockdown SriLankaCrisis
By Irumporai Apr 02, 2022 11:54 AM GMT
Irumporai

Irumporai

in உலகம்
Report

இலங்கையில் இன்று மாலை 6 மணி முதல் திங்கட்கிழமை காலை 6 மணி வரை முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் நிலவும் கடும் பொருளாதார நெருக்கடியால் மக்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகி உள்ளனர்.இதனால் அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு மற்றும் வின்னை முட்டும் அளவுக்கு விலை உயர்ந்துள்ளது.

பெட்ரோல்,டீசல் தட்டுப்பாடு காரணமாக மக்கள் மண்ணெண்ணையை வாங்க நீண்ட தொலைவிற்கு வரிசையில் நிற்கின்றனர். இதில் 13 மணி நேர மின்வெட்டு மக்களை முற்றிலுமாக முடக்கியுள்ளது   

இந்நிலையில், இலங்கையில் இன்று மாலை 6 மணி முதல் திங்கட்கிழமை காலை 6 மணி வரை முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. பொருளாதார நெருக்கடியை அடுத்து நாளை போராட்டத்திற்கு மக்கள் அழைப்பு விடுத்திருந்த நிலையில் ஊரடங்கை இலங்கை அரசு அறிவித்தது.  

நாளை இலங்கையில் மிக பெரிய அளவிலான போராட்டத்திற்கு மக்கள் அழைப்பு விடுத்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.