ராஜபக்சவுக்கு நெருக்கமான ஜோசியர் அக்கா... கடுப்பில் போராட்டக்காரர்கள் செய்த செயல்
இலங்கையில் வலிமையான பெண்களில் ஒருவராக பார்க்கப்படும் ஷாமன் ஞான அக்காவின் ஹோட்டலுக்கு தீ வைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கையில் பொருளாதார நெருக்கடியை தொடர்ந்து கடுமையான போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. மக்கள் தொடர் போராட்டத்தால் பிரதமர் பதவியை மகிந்த ராஜபக்ச ராஜினாமா செய்தார். அதேசமயம் போராட்டக்காரர்களால் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சே மற்றும் ஆதரவு அரசியல்வாதிகள் வீடுகள், வாகனங்கள் தொடர்ந்து தீ வைத்து எரிக்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் இலங்கையின் வலிமையான பெண்களில் ஒருவராக பார்க்கப்படும் ஷாமன் ஞான அக்காவின் ஹோட்டலுக்கும், அனுராதபுராவில் இருக்கும் அவரின் வீட்டிற்கு தீ வைக்கப்பட்ட சம்பவம் நடைபெற்றுள்ளது. ஷாமன் ஞான அக்கா இலங்கையில் தன்னை காளியின் அவதாரம் என கூறி வந்தவர். தனியார் மருத்துவமனை ஒன்றில் இவர் அட்டெண்டர் பணியில் இருந்தார். பின் தன்னை காளியின் அவதாரம் என்று கூறி ஆன்மீகத்தில் களமிறங்கினார்.
இலங்கையிலேயே நாட்டில் அதிகம் கவனிக்கப்படும் சாமியாராக மாறிய நிலையில் ஷாமனிடம் அதிபர் கோத்தபய ராஜபக்சே, முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சே, முன்னாள் அமைச்சர் நமல் ராஜபக்சே என்று பலரும் ஜோசியம் பார்க்க வந்தனர்.
அருள் வழங்குவது, எதிர்காலத்தை சொல்லுவது, அரசுக்கு ஆன்மீக குருவாக இருந்து ஆலோசனை வழங்குவது போன்ற பணிகளை செய்து வந்த அவரிடம் மஹந்த ராஜபக்சவும், கோத்தபய ராஜபக்சவும் பலமுறை ஆலோசனை கேட்டுள்ளனர். ஒரு கட்டத்தில் மஹந்த ராஜபக்சவின் மூளையாக செயல்பட்டார்.
இலங்கையில் போராட்டங்கள் தொடங்கிய போது அதை சரி கட்ட இவர் பல ஆலோசனைகளை சொல்லியதாக கூறப்படுகிறது. அப்போது இலங்கையில் பொருளாதாரத்தை சரி செய்ய வேண்டாம். அதற்கு பதிலாக போராளிகளை நம் பக்கம் இழுக்கலாம் என்பது போன்ற முட்டாள்தனமான ஐடியா எல்லாம் கொடுத்து இதற்காக அவர் வசியம் வைக்கும் வேளையிலும் இறங்கியதாக சொல்லப்படுகிறது.
ஆனால் போராட்டம் நிற்பதற்கு பதிலாக இன்னும் வீரியம்தான் அடைந்துள்ளது. தற்போது ஷாமன் ரகசிய இடம் ஒன்றில் தலைமறைவாகி உள்ளதாக கூறப்படுகிறது.